பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 131 ஆள் இவ்வளவு தூரம் வந்து கூப்பிடும்போது எப்படிப் போகாமல் இருப்பது. டிரைவருக்குப் போகத் துடிக்குது. "சும்மா இருக்கிறீர்கள்; போய்விட்டு வரலாம்' என்பது அவன் திணித்த ஆலோசனை. அவனுக்குச் சில சமயங்களில் பெரிய திருமணங்களுக்குப் போவதில் உள்நோக்கம் இருக்கத்தான் செய்தது; அது என்னவென்று விளங்காமல் இருந்தது. ஏன் இவன் தேவை இல்லாமல் அறிவுரை தருகிறான்? போகட்டும் அறிவுரை தருவது மனித உரிமை; பலரும் செய்வது. அவனுடைய அறிவுரை இந்தப் பயணத்தை முடிவு செய்வதற்கு ஒரளவு காரணமும் ஆகியது. அவன் மகாபுத்திசாலி என்று கொள்வதற்கு இல்லை. சில சமயம் இவரைவிட புத்திசாலித்தனமான கருத்துகளும் அவன் மூளையில் உதயமாவதைத் தடுக்க முடியாது. அவன் தினமும் பத்திரிகைகளைப் படித்து வருகிறான். காலையில் தினகரன்; மாலையில் மாலை முரசு, நடுப்பகலில் டி.வி நியூஸ். இவர் தன் நிறுவனம் உண்டு; தான் உண்டு; தன் செல்லுலார் போன் உண்டு என்று தன் வேலையை மட்டும் கவனிப்பாம்; அடுத்தவர் அக்கிரமங்களுக்கு இவர் செவி தருவது இல்லை. எவ்வளவோ பேர் இவரிடம் தேவை இல்லாமல் ஆட்சிக் கலைப்பைப் பற்றி ஆரூடம் சொல்ல வந்து இருக்கிறார்கள். இவர் அதைப் பற்றிக் கவலைப்பட்டது இல்லை. - எது எப்படிப் போனால் என்ன! நம் கடமையை நாம் செய்ய வேண்டும்; எதுவுமே நிலையில்லை; 'நிலை யான ஆட்சிக்கு வாக்குத் தாருங்கள்' என்ற பிரச்சாரம் செய்யப்பட்டது.