பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 133 பட்டு வேட்டி கொண்டு அவர் பளபளப்பாக விளங்கியதால் அவராகத்தான் இருக்க முடியும் என்று யூகிக்க முடிந்தது. போலீசு நாய் எங்கிருந்தாலும் குற்றவாளிகளை மோப்பம் பிடிக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை அல்ல. கலியாணத்துக்கு வந்தவர்களை ஒருவர் விடாமல் சந்தித்து விசாரித்து மகிழ்ச்சி' என்று தெரிவிப்பது, மண வீட்டுக்காரர்கள் வாடிக்கை; தேர்ச்சி பெற்றவர்கள் என்பது அவருக்கு அனுபவம். இவரை எப்படியோ அவர் கண்டு கொள்கிறார்; இவரைத் தம் உறவினர்களுக்கு அவர் அறிமுகம் செய்தது மகிழ்ச்சி அளித்தது; நண்பர்' என்று மட்டும் சொல்லி இருந்தால் போதும்; அது மகிழ்ச்சியைத் தந்திருக்கும். கூடுதலாகக் கூறியது இதுதான் 'இவர் கார் வைத்திருக்கிறார்; அவ்வப் பொழுது லிஃப்டு தருவார்; மிகவும் நல்லவர்' என்று அறிமுகம் செய்தார். தன்னை அவர் மதித்தது விளங்கியது; எப்படி அவர் தன்னை மதிக்கிறார் என்பதும் விளங்கியது. இவருக்கும் அவருக்கும் இருந்த உறவு இவரால் தவறாகக் கணிக்கப்பட்டு இருந்தது. அன்று அது திருத்தப் பட்டது; 'பிழையும் திருத்தமும்' என்று அச்சில் பதிப் பிக்கப்பட்டது. சரியான வாசகம் இவருக்குக் கிடைத்தது. இந்த அவமானம் ஏற்படும் என்று இவர் எதிர் பார்க்கவே இல்லை. என்ன செய்வது? இதுபோல் சின்ன சின்ன தொடர்புகளுக்கு எல்லாம் திருமணங்களுக்குப் போவது தவறுதான் என்பதை உணர்கிறார்.