பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 போயிருக்கக் கூடாது வந்த இடத்தில் இவர் அங்கு 'விருந்து' என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்வதில் விருப்பம் ஏற்படவில்லை. இருந்தாலும் இவர் காணிக்கை செலுத்தியிருந்ததால் தவறு இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டார். மற்றும் அதற்கு என்று நியமிக்கப்பட்டிருந்த பிரமுகர் இவரைவிட மறுத்துவிட்டார். 'கட்டாயம் சாப்பிட்டுத்தான் போகவேண்டும்' என்று வற்புறுத்தினார். அவசியம் சாப்பிட்டுப் போக வேண்டும் என்பதையும் மறக்காமல் சேர்த்துக் கூறினார். இந்த ஒலிகள் அவர்க்கு எதிர் ஒலிகளாகக் கேட்டன. வெளியே செல்ல எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. இந்த டிரைவர் சும்மா இருக்கக் கூடாதா, அது அவன் பழக்கம். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கமெண்டு கொடுப்பது அவனுக்குப் பழக்கம் ஆகிவிட்டது. கிரிக்கெட் ரசிகன் ஆவான் அவன். "எப்படி கல்யாணம்?' எப்படி வரவேற்பு என்பது அந்த வினாவின் உள்ளுறை. 'பிரமாதம்' என்று தன் தோல்வியை மறைத்துக் கொண்டு பேச நினைத்தார்; அவரால் முடியவில்லை; உண்மைக்கு ஆற்றல் இருந்தது. 'போயிருக்கக் கூடாது' என்று தாழ்ந்த குரலில் அவர் பதில் அமைந்தது; அவனும் அதையே எதிர் ஒலித்தான் 'போயிருக்கக் கூடாது' என்றான். "என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை; அழைக்கவே இல்லை' என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தான். சாப்பிட அவனுக்குப் பத்து ரூபாய் நோட்டு இரண்டு தருவது நியாயம் எனப் பட்டது.