பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 137 காத்தார். திரெளபதிக்குக் கண்ணன் புதிய புடவையைக் கொடுத்ததுபோல் அக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலை அவர் கையில் நீட்டினார். அது முதல் அவர் 'டொனேஷன் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டார். கூட்டத்தில் பேசுவது இல்லை. மேடை ஏறுவது இல்லை, பீஷ்ம விரதம் கொண்டு விட்டார். அதனால் தான் அன்று மேடை ஏறித் தம்பதி களை ஆசீர்வதிக்கவில்லை. அந்தப் பையன் இவருக்கு அறிமுகம்; அஞ்சல் நிலையத்தில் அவனிடம் பேனா வாங்கி எழுதினார். அதை அவர் மறக்காமல் கூப்பிட்டுக் கொடுத்தார். அந்த நன்றி மறக்காமல் அவரை அவன் திருமணத்துக்கு அழைப்பு அனுப்பி இருந்தான். - வீடு தேடி காரில் வந்து இவரைக் கட்டாயம் வர வேண்டும் என்று சம்மன் தந்து அழைத்திருக்கிறான். இவரால் எப்படி மறுக்க முடியும்? ஆசி கூறுவது இருக்கட்டும். எப்படியும் அதில் 'டின்னர் என்று போட்டிருந்தான். பின்னர் அதுவும் ஒரு காரணம் ஆயிற்று. அந்த மணத்தில் பார்த்தது அவனை அப்புறம் அவன் என்ன ஆனான். அஞ்சல் நிலையத்துக்கு இவர் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க வாய்ப்பு நேர்ந்தது இல்லை. - - அந்தப் பெண் இவனைவிட சற்று உயரம் கம்மி, அதாவது சராசரி பெண்களைவிட ஆறு அங்குலம் குறை வாக இருந்தாள். அவள் உயரமான செருப்பு அதை அணிந்து அவனுக்கு நிகராக நடந்தாள் என்று கேள்வி. இப்பொழுது குள்ளமானவர்களை ஆறு அங்குலம் உயரம் வரை நிமிர்த்தலாம்; மருத்துவம் முன்னேறி