பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 கிளிஞ்சல்கள்

கூப்பிடவும் தோன்றவும் இல்லை. ஏன் ஒருவரை அவள் கூறி விட்டதால். அவனைக் குறிப்பிட அவளுக்கு அகராதியில் சொல் கிடைக்கவில்லை. அவன் மட்டும் அவளைப் பெயர் வைத்து அழைக்க முடிந்தது.

    அவள் முப்பதிலும் இப்படித்தான் கூறினாள். "மணத்துக்கு அவசரம் இல்லை" எனக் கூறினாள். நாற்பது அவளிடம் நகர்ந்து வருகிறது. இப்பொழுதும் அப்படித்தான் சொல்லுகிறாள்.
    அவள் ஏன் அடிக்கடி கண்ணில் படுகிறாள்? அவளைப் பற்றி ஏன் நாம் கவலைப்பட வேண்டும்.
    ஏனோ தெரியவில்லை; அரித்துக் கொண்டே இருக்கிறது.
    அவள் இளமை கழிகிறது; அவளுக்கு மணம் நடக்குமா நடக்காதா.
    அவள் கடற்கரையில் கிளிஞ்சல்களைப் பொறுக்குகிறாள்; பொறுக்கிக் கொண்டே இருக்கிறாள். முத்துகள் கிடைக்கவில்லை. வெறும் சத்தைகள்தான் படுகின்றன.
    நிறம் இருக்கிறது; கற்றிருக்கிறாள்; செல்வம் இருக்கிறது; அதனால் அவள் எந்தத் தொழிலையும் தேடவில்லை.
    வேலியைக் கடந்துவிட்டாள்; வேலி அவளுக்குக் காப்பாக இருந்தது. முள் வேலிதான்; உள்ளே இருந்தால் அவளுக்குக் காப்புக் கிடைத்திருக்கும்.
    அவள் கிளிஞ்சல்களைத்தான் தேடுகிறாள்; அவற்றைத் தூக்கி எறிகிறாள்; இன்னும் அந்த விளையாட்டுப் பருவத்திலேயே இருக்கிறாள். என்ன செய்வது? இப்படியும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.