பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 141 குறைத்தவன். வயிற்றைச் சிறுக வைத்துத் தசைநார்கள் தன் தோள்களில் அங்கே நிமிர்ந்து அமைய அழகுடன் விளங்குகிறான். சில மதிப்பெண்கள் குறைவு, அவ்வளவு தானே . 'ஏன்'பா! உன் மனைவியைப் பத்திரமாகப் பாது காத்துக் கொள்; அவள் பேரழகி, எவனாவது தட்டிக் கொண்டு போய்விடுவான்' என்று குத்திக் கிளறினார். இது அவருக்கு ஒரு விளையாட்டு; அவனுக்கு இது ஒரு துண்டுதல். 'ஏன்'மா; இவன் பின்னாலே பெண்கள் சுற்றுகிறார் கள். கிடைத்தால் போதும் காத்திருக்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டும்?' என்று தூண்டிவிட்டார்; சுடர் விடத் தொடங்கியது. அவ்வளவுதான்; அடுத்த ஆண்டு அந்த வீட்டில் குழந்தைக்குத் தொட்டில் பழையது தேவை என்று இவரிடம் வந்து கேட்கிறான். "என்னப்பா விசேஷம்?' 'பழைய தொட்டில் அதில்தான் எங்கள் செல்வன் அவனைப் போடவேண்டும். நீங்கள் கட்டாயம் அந்த விழாவுக்கு வரவேண்டும்” என்று அழைத்தான். இவர் பேனாவைத் தவறாமல் அவனுக்குத் தந்திருக் கிறார். அவனும் மறக்காமல் தொட்டிலைத் திருப்பித் தந்தான் இவர் நினைவுப்படுத்தாமலேயே.