பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ராசியான பேர் 'கவலைப்படாதே கலைமகள் உனக்கு அனுக் கிரகம் செய்வாள்; எழுது” என்றார். மகாகவி பாரதியின் அருள் கிடைத்துவிட்டது என்ற ஒரே சந்தோஷம். அதுமுதல் என்னை ஒரு மகாகவி என்று நினைத்துக் கொண்டேன். கவிதை எழுதுவது என்று என் பேனா எடுத்தேன். தவறு என் எழுதுகோல்’ எடுத்தேன். செங்கோல் ஒச்சி աՅ1. என் மனைவி எதிரே நின்றாள். காளியைப் பற்றி ஒரு கவிதை எழுத முடிந்தது. 'மகாகாளி' என்று அதற்குத் தலைப்புக் கொடுத் தேன். ஒவ்வொரு எழுத்தாளன் பின் ஒருத்தி இருக்க வேண்டும் என்பது இந்த வகையில் உண்மையாயிற்று. “என்ன காளியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்' என்று கேட்டாள். 'லட்சுமியைப் பற்றி எழுத முடியவில்லை. எனக்குத் கிடைத்த அருட்பிரசாதம் இதுதான்' என்றேன். “என் கவிதை வடிவாக அவள் நின்றாள்; ரசித் தேன்.' 'நீ எனக்கு நறுந்தேன்' என்று தொடர்ந்தேன். 'உன்னை அடியோடு வெறுத்தேன்' என்றாள். எங்கள் பேச்சுத் தேனாகப் பொழிந்தது. 'இதை எங்குக் கற்றீர்?' என்றாள். கண்ணதாசன் காட்டிய வழி' என்றேன்.