பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 149 'இரவில் ஏன் கண் விழிக்கிறீர்'? என்று கேட்டாள். 'இப்படி எழுதினால் உடம்புக்கு என்ன ஆகும்' என்று விசாரிப்பாள். - "நீங்கள் உண்மையில் பிரமதேவனாகப் பிறக்க வேண்டியவர் இப்படி வந்து மாட்டிக் கொண்டீர்கள்' என்பாள். எனக்குக் குழந்தை இல்லை. எதை வைத்து இவள் என்னை இப்படிக் கூறினாள் என்பது புலப்படவில்லை. "எழுத்து தத்ரூபமாக இருக்கிறது” என்பாள் 'பொய் சொல்லக் கூடாது' என்றேன். அவளுக்கு விளங்கவில்லை. 'பொய்யை வைத்து எழுதக் கூடாது' என்றேன். அவள் ஒரு கதை எழுதி வைத்திருந்தாள். அதை என்னிடம் தந்து பத்திரிகையில் போட்டு அருளுமாறு வேண்டினாள். - 'நீ அறிமுகம் ஆகாதவள். எடுபடாது' என்றேன். "உங்கள் ப்ேரிலேயே வரட்டும்” என்றாள். அவள் எழுதிய முதல் கதை காதல் கதை. அவள் ஆரம்ப எழுத்து என்பதை அது காட்டியது. அவள் இளமை ஆசைகளை எல்லாம் இதில் கொட்டி வைத்து இருந்தாள். 'அவள் தானா இவள்?’ என்று சந்தேகம் வந்தது. 'நீ யாரை வைத்து எழுதுகிறாய்” என்று கேட்டேன். 'சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைகிறேன்' என் றாள். அந்தக் குட்டிச் சுவர் நான்தான் என்பதை அறிய முடிந்தது.