பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ராசியான பேர் ஆதாரத்தோடுதான் தான் எழுதுவதாக அறிவித்தாள். 'கரிக்கட்டை' என்று அந்தக் கதைக்குத் தலைப்புத் தந்தாள். அவள் அதில் என்னைத் தீட்டித் தீர்த்துவிட்டாள். 'அவன் கருப்பு என்கிறாய்; எப்படி அவனிடம் அவள் காதல் கொண்டாள்' என்று கேட்டேன். "அப்படித்தான் ஒரு சிலர்” என்றாள் அவள். அதிர்ச்சி தந்தது; அதனால் அந்தக் கதைக்கு அமோகமான வரவேற்பு ஏற்பட்டது. கரிக்கட்டை என்ற தலைப்பு அவளை ஓர் ஒவி யனாகவும் ஆக்கிவிட்டது. வீட்டுச் சுவர்களில் எல்லாம் இந்தத் தலைப்பு இடம் பெற்றது. அதைச் கிறுக்கி வைத்தாள். - அதே நினைப்பு 'ஏன் இப்படிச் சுவரைக் கரியாக்கி விட்டாய்' என்று கேட்டேன். அவள் என்னை விரும்புகிறாள் என்பதை அறிய முடிந்தது. - - 'கரித்துண்டு' என்ற நாவல் பரிசு வாங்கி இருக்கிறது” என்றாள். 'அது கதை, இது சதை என்றேன். 'அந்த நாவல் தான் இதற்கு விதை' என்றான். இவள் தமிழில் நாவல்கள் படிக்கிறாள் என் தை அறிய முடிந்தது. தாடி என்ற பெயரே எனக்கும் புனை பெயராகி விட்டது. தாடி எழுதுகிற கதை புதுமை மிக்கது என்ற பெயர் வாங்கிவிட்டேன். பிறகு நடிகையைத் தொட்டேன். அவள் கோபித்துக் கொள்ளவில்லை வேறு யாரைப் பற்றி எழுதுவது?