பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 151 'ஒரு நடிகை நடிக்க வருகிறாள்' என்ற தலைப்பைத் தந்தேன். இந்தத் தலைப்பு ஒரு பிரபல நாவலாசிரியரிடம் இருந்து திருடிக் கொண்டது. இந்தக் கதை ஒரு நடிகையின் உண்மை வாழ்க்கை யைத் தொட்டு விட்டது. அவள் என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்தி விட் டாள். - அதற்குப் பிறகு எப்படி எழுதுவது' என்பதைத் தெரிந்து கொண்டேன். தாக்கி எழுதுவதுதான் எழுத்து என்பதை அறிந்து கொண்டேன். யார் யாரோ மிரட்டல் கடிதங்கள் எழுதத் தொடங்கி விட்டார்கள். 'இது உன் எழுத்துக்கு வெற்றி” என்று பாராட்டி னார்கள். 'யார் மனமும் புண்படாதபடி எழுத வேண்டும்' என்று அறிவுரை கூறினார் என் தலைவர்; அதாவது தலையங்கம் எழுதி வரும் தலைமை ஆசிரியர். 'அதற்கு ஒரு தமிழ் எழுத்தாளரின் எழுத்துக்களை சுட்டிக் காட்டினார். அவர்தான் எழுத்துக்கு வழிகாட்டி என்றார். எனக்கு வேகம் வளர்ந்தது. என் எழுத்தில் சூடு தெறித்தது; அனல் கக்கியது 'நீ பகையைத் தேடிச் செல் கிறாய்' என்று அறிவித்தார்கள். அதுதான் எழுத்துக்கு வெற்றி என உணர்ந்தேன். 'கரிக்கட்டை அந்தக் கதைக்கு வடபழனியில் இருந்து அழைப்பு தந்து இதழ் அவர்களிடம் வந்தது. அதைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை.