பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ராசியான பேர் என் மனைவி என் கருத்தை எற்றுக் கொள்ள வில்லை. கதை திரைப் படத்தில் வர வேண்டும் என்று விரும்பினாள். அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க எந்த அழகியும் முன் வரவில்லை. ஆண் பெண்ணைச் கெடுத்ததாக மாற்றி னாள். அழகன் என்ற தலைப்பைக் கொடுத்துக் கதையை மாற்றியதற்குப் பிறகு அதை நடிக்க அமெரிக்காவுக்குப் போய்த் திரும்பி வந்த நடிகை நடிக்க முன் வந்தாள். அழகன் ஒகோ என்று ஒடியது. அதற்குப் பிறகு என் வீடு தேடி அஞ்சல் கடிதங்கள் நிறைய வந்தன. தாடி என்ற பெயரை மட்டும் கொடுத்தால் போதும் என்றார்கள். 'முடியாது; நானே எழுதுவேன்' என்றேன். "ஒருமுறைதான் ஒருவன் கதை எழுத முடியும். தொடர்ந்து எழுத முடியாது; எழுதினால் தோல்விதான்' என்று அனுபவம் கொண்டு அறிவித்தார்கள். ‘'என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டேன். 'உங்கள் பெயர் மட்டும் தந்து விடுங்கள்; நாங்கள் படம் எடுத்துக் கொள்கிறோம்' என்றார்கள். 'கதையே வேண்டாம்; கதை இல்லாமல் படம் எடுப்பதில்தால் படத்தின் வெற்றி என்று அறிந்தவர்கள் தெரிவித்தார்கள். இது புதிய சிந்தனையாக இருந்தது. என் கதை அவர்கள் கேட்கவில்லை; தாடி அந்தப் பெயர் மட்டும் தந்து உதவினேன்'. என் வீட்டு முகப்பில் தாடி' என்று கல்லில் எழுதி வைத்தேன். இந்தப் பெயரில் பல படங்கள் ஒடிக் கொண் டிருக்கின்றன; ராசியான பெயர்.