பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 153 ஸ்கூட்டருக்குக் கிடைத்த எண் அதிருஷ்டம் என்று நினைத்தேன்; அதே போன்ற அதிருஷ்ட எண் என் புதிய காருக்குத் தேடிக் கொண்டிருக்கிறேன். 25 நாரத முனிவரின் பூலோக யாத்திரை விசா இல்லாமல் விசயம் செய்த நபர் யார் என்று விறுவிறுப்பாக அவரைச் சுற்றிக் கொண்டார்கள். "விசா எங்கே’’ என்று கேட்டார்கள். 'எனக்குத் தேவை இல்லை” என்கிறார் வந்தவர். "σσότ? "வெளிநாட்டு டாலர்கள் நிறைய கொண்டு வந்திருக் கிறேன்; பாரத நாட்டில் முதலீடு செய்ய' என்றார். 'உங்களுக்கு விசா தேவையில்லை; தாராளமாக வரலாம்; கதவுகள் திறந்து வைத்து இருக்கிறோம்' என்றார் கள். பொடி டப்பா எடுத்தார்; காரம் மணம் மிகுந்த பட்டணம் பொடி அவர் கையில் இருந்தது. 'இது எப்படிக் கிடைத்தது?" 'இதுதான் எங்கள் நாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி யாகிறது. உங்களுக்கு டாலர் சம்பாதித்துக் கொடுப்பதே இந்தப் பட்டணம் பொடிதான்' என்றார்.