பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 155 'தெய்வங்கள் எல்லாம் அண்ணா நகருக்கும் பெசன்ட் நகருக்கும் موما زئ வந்து விட்டார்கள். அஷ்டலட்சுமி களும் அடையாறு வந்து சேர்ந்து விட்டார்கள். அங்கு எனக்கு போர் அடித்தது; வந்து விட்டேன்' என்றார். 'கலகம் செய்வது உம் தொழிலாமே' "தெய்வத் திலகங்கள் அப்படி நினைக்கிறார்கள். என் வாயிலிருந்து ஏதாவது வந்தால் அதை வைத்து அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இப்பொழுது தெய்வப் பெண்கள் ரொம்பவும் முன்னேறிவிட்டார்கள்; கம்ப் யூட்டர் சைன்ஸ் அது இது என்று படிக்க ஆரம்பித்து விட்டார்கள். கணவனோடு சண்டை போடுவது தம் நிலைக்குத் தாழ்வு என்று கருதுகிறார்கள். ஊடல் என்பது வாடல் இருந்தால் தானே வரும்! அவர்கள் சின்ன சின்ன விஷயங்களில் ஈடுபடுவது இல்லை; அதனால் இப் பொழுது எனக்கு அங்கு வேலை இல்லாமல் போய் விட்டது” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார். 'பாரதப் பிரதமரைப் பார்க்க உத்தேசம் உண்டா?” "முக்கியமாக அவரைத்தான் பார்க்க வந்திருக் கிறேன். வெளிநாட்டு மூலதனம் கொண்டு வந்து தொழில் நடத்த அனுமதி தருகிறார்” என்று கேள்விப்பட்டோம். 'அளகாபுரியில் இருந்து குபேரன் ஒரு செய்தி சொல்லி அனுப்பினார். அவர் நடத்தும் உலக வங்கியில் இருந்து நிறைய மூலதனம் அள்ளித் தந்திருக்கிறார். தமிழ் நாட்டில் இப்பொழுது நிறைய புராணப்படங்கள் எடுக் கிறார்களாமே அதுபோல் ஒரு படம் எடுத்துக் கொண்டு வர அனுப்பி இருக்கிறார்'. நாரதர் சொன்னது மிகவும் வியப்பாக இருந்தது. அவர் வள்ளித் திருமணம் சகதலப்பிரதாபன் காலத்தில் இருக்கிறார் என்று நினைத்தார்கள்.