பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 157 'பொடி மட்டை' எடுத்துக் கொஞ்சம் உறிஞ்சினார். உற்சாகம் வந்தது. 'இதென்ன கெட்ட பழக்கம்' என்கின்றனர். 'புகை பிடிக்கக் கூடாது என்று சொல்கிறார்களே தவிரப் பொடி போடக் கூடாது என்று யாரும் சொல்ல வில்லையே” என்று கூறினார். 'சிகரெட் உடம்புக்குக் கெடுதி; அதனால்தான் இந்தப் பொடி மட்டை' என்றார். 'சங்கீதம் பாடுகிறவர்கள் பழகிக் கொள்ளும் பொடி விஷயம் இது' என்றார். 'உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று திருப்பிக் கேட்டார் அந்த லிப்ஸ்டிக் பிளாஸ்டிக் பூவையை: 'ஆகிவிட்டது; டைவர்ஸ் செய்துவிட்டேன்' என் றாள் வினா தொடுத்தவள். 'இந்த வயதிலா?” 'கிழவியான பிறகா டைவர்ஸ் செய்து கொள் வார்கள்' என்று கேட்டாள். காரணம்?” 'இதைவிட better chance வர இருந்தது' 'என்ன ஆயிற்று?’’ "என்னைவிட better girl அவரை வளைத்துக் கொண்டாள்' 'உங்கள் நிலைமை?” "கொஞ்சம் பொடி கொடுங்கள் சொல்கிறேன்' என்றாள்.