பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நாரத முனிவரின் பூலோக யாத்திரை நயா டில்லிக்கு நாரதர் பயணம் தொடர்ந்தது. தான் எப்படிப் பிரதமரைச் சந்திப்பது என்று யோசனை செய்தார். வெளிநாட்டுத் துதர் என்றால் மரி யாதை கிடைக்கும் என்பதால் தன்னை இந்திரன் அனுப்பி வைத்ததாக அறிவித்தார். - 'இந்திரன் மாறவே இல்லையா' என்று கேட்டார். 'இந்திராணிதான் ஆட்சி செய்கிறாள். தேவர்கள் பெண்களை மதிக்கத் தொடங்கி விட்டார்கள்; சட்டத் திருத்தம் செய்து விட்டார்கள்” 'இந்திரன்?” ‘'வேலை இல்லை; வேதனைப் படுகிறான்; ஊழல் வழக்குகளில் சிக்கிக் கொண்டு வெளிவரமுடியாமல் இருக் கிறார்” 'அங்கும் இப்படித்தானா என்று கேட்டுவிட்டு அப்புறம்?' என்றார். 'எந்தப்புரம்' என்று கேட்டார். 'நடன மாதர்கள்?" 'அவர்கள் அதை அகெளவரம் என்று ஆடுவதை விட்டு விட்டுப் படித்துப் பதவிகள் தாங்கி மற்றவர்களை ஆட்டுவிக்கிறார்கள்' 'குடும்பக் கட்டுப்பாடு?” 'மரண பயம் இல்லாமல் இருந்தது. அதைப் புகுத் திய பிறகு எல்லாம் சரியாகி விட்டது' 'புதுவெள்ளம் வருகிறது. பழைய வெள்ளம் மறை கிறது. காலங்கள் மாறுகின்றன. ஞாலத்தைப் போல சப்த ஸ்வரங்களைக் கேட்கிறோம்; புதுமலர்கள் பூத்துக் குலுங் குகின்றன. பழமை மடிந்து விடுகிறது”