பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நாரத முனிவரின் பூலோக யாத்திரை நாரதர் மிகவும் சோர்வோடு காணப்பட்டார். பாரத நாட்டில் மக்களைத் திசை திருப்பும் கடத்தல் படங்கள் தான் ஒடுகின்றன என்ற அபிப்பிராயத்தில் வந்தவர்; அதற்கு எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அறிகிறார். அன்று இரவு பொழுது போகவில்லை. வெள்ளிக் கிழமை நள்ளிரவு புதிய படம் ஒன்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட காசெட்டு .[9/5ئے 'திருப்புமுனை என்ற தமிழ்ப் படம் காட்டப் பட்டது. பாரத தேசம் முழுவதும் பார்க்கிறார்கள். அவருக்கே வியப்பு ஏற்பட்டது. நாட்டு மக்களின் அல்லல்கள் தீவிரமாகச் சித்திரிக்கப் பட்டு இருந்தன. அரசியல் மோசடிகள், கட்சிகளின் ஆதிக்கம், அதிகாரிகளின் அட்டுழியங்கள்; மக்கள் எதிர்ப்பு, பயங்கரவாதம், சாலை மறியல் போராட்டங்கள் இவற்றைக் காட்டிய படம் அது. - இன்று மக்கள் விழிப்போடுதான் இருக்கிறார்கள். போராட்டங்கள் தொடர்கின்றன என்பதை அச் சித்திரம் காட்டியது. "காதல்’ என்பது அடியோடு இடம் பெறவில்லை. வாழ்க்கையின் மோதல்களைக் காட்டும் அருமையான படம் அது. பாரதம் விழித்துக் கொண்டது. போராட்டங்கள் தொடரும் என்பதை அறிய முடிந்தது அடுத்த படம். "தெருமுனை' என்பது அந்தப் படத்தின் தலைப்பு: எதையும் ஊர்வலம் செய்துதான் சாதிக்கிறார்கள்; தெரு முனைதான் பாராளுமன்றம் என்று காட்டப்பட்டது. ஜனநாயகத்தின் கொடுமைதான் ஊழல்களுக்குக் காரணம் என்பதை அறிந்து அச்செய்தியோடு தெய்வ