பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நவீன தெனாலிராமன் 'சீனிவாசன்” என்றார். கதாசிரியனுக்குத் தலைகுனிவு ஏற்பட்டது. 'யார் பா அந்த சீனிவாசன்' 'அவர் ஒரு சிறந்த நடிகர். உன்னைப் போலத்தான் சிரிப்பு ஊட்டும்படி பேசுவார்' என்றார் அவர். "ஓ! தேங்காய் சீனிவாசனைச் சொல்கிறீரா'? என்று சிரித்தான். கதாசிரியருக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அவர்கள் பேச்சில் தான் அகப்படவில்லை என்று புரிந்து கொண்டார். அப்பா சொல்வதால் கல்லூரிக்குச் சென்று படித்து வந்தான். அவனுக்கு ஒருநல்ல பழக்கம்; தான் அழகாக இல்லாவிட்டாலும் பெண்களைப் பார்ப்பது அவனுக்கு ஒரு "ஹாப்பியாக இருந்தது. இவள் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறாள் என்று சில சமயம் வியப்பான். பொதுவாக அழகு அவனுக்கும் பிடிப்பது இல்லை; அழகில்லாத பெண்களைத்தான் அவன் விரும்புவான்; அதற்குக் காரணம் அழகில்லாவிட்டால் அவர்களிடம் குணம் இருக்கும் என்ற முட நம்பிக்கை தான். கல்லுரியில் தமிழாசிரியர் சிலப்பதிகாரம் பாடம் நடத்தினார். கண்ணகி விரித்த கூந்தலும் பிடித்த சிலம்பும் கொண்டு தலைவிரி கோலமாகப் பாண்டியன் அவைக்களத்துக்குப் போனாள்' என்று சொன்னார். அவனால் கண்ணகியை மறக்க முடியவில்லை. எதிரே ஒரு கல்லூரிப் பெண் வந்து கொண்டிருந்தாள்; அவள் கொஞ்சம் அழகாக இருந்தாள்; இதுதான் அவன் முதல் தடவையாக அழகிய பெண்ணைப் பார்த்து ரசித்தது; விமரிசித்தது.