பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 15 'இனிமேல் இந்த மாதிரி குப்பைகளை வீட்டுக்குக் கொண்டு வரவேண்டாம். அவர்களுக்கு உதவ வேண்டும் என்றால் காசு கொடுத்து அனுப்புங்கள்' இந்த ஆணை பிறந்தது. "சுவை கண்டார்; அவர்கள் விடமாட்டார்கள்' இது எங்கோ படித்த நினைவு. குட்டி போட்ட பூனை சுற்றிச் சுற்றி வரும் என்பது பழமொழி. அவள் மறுபடியும் இதே வீட்டை நாடி வருகிறாள். புதுக்கதை எதுவும் சொல்வதற்கு இல்லை. பழங்கதைகள் பேசினால் மகிமை இல்லை. அதனால் அவள் நேரே வியாபாரத்துக்கு வந்தாள். - "என்னிடம் நீ விற்க வரும் பொருளில் உனக்கு என்ன லாபம் கிடைக்கும்?” 'இவர் இந்தத் தொழிலுக்குப் போட்டியாக வரு கிறார். இவருக்கு என்ன அது தேவை யாரோ? இவருக்கு வேண்டியவருக்கு இவர் சிபாரிசு செய்யக் கருதுகிறார்” இது அவள் கணிப்பு. 'பத்து ரூபாய் கிட்டும்' தருகிறாள். . தன் கைவசம் இருந்த பழைய நோட்டுகளில் புதிய நோட்டு, அது பத்து ரூபாய். அதை அவளிடம் தருகிறார். 'போதுமா? சென்றமுறை நாற்பதுக்கு வாங்கினர்

  • ,

p என்று சட்டென்று பதில் களே 'இது பண்ட மாற்று அல்ல; உலக நிதியில் இருந்து தரப்படும் பொருள் உதவி'. அவளுக்கு இந்தப் பத்திரிகைத் தமிழ் விளங்க வில்லை. "நீ இங்கு எதிர்பார்க்கின்ற லாபம் பத்து அதை உனக்குத் தருகிறேன்; நீ பெற்றுக்கொள். இது நான் தரும் பரிசு’’ என்றார்.