பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 169 உடனே கூட்டம் கூடியது. 'ஏன்'டா அவள் கையைப் பிடிச்சு இழுத்தே?” என்று கேட்டார்கள். 'அவள்தான் கையைப் பிடிக்கச் சொன்னாள்' என் றான். 'கணவன்தான் ஒரு பெண்ணின் கையைப் பிடிக்க வேண்டும்' என்று சொன்னார்கள். 'அப்படியானால் அவளை எனக்குக் கட்டி வையுங் கள்; தவறுதலாக அவள் கையைப் பிடித்து விட்டேன்' என்றான். 'அவள் மணமானவள்' என்று சொன்னார்கள். “சீக்கிரம் புருஷன் கிட்டே சொல்லி டைவர்ஸ் பண் னிக்கச் சொல்லுங்க எனக்காக' என்றான். ‘'எதுக்கு?" 'நான் அவளுக்குப் புது புருஷன் ஆவதற்கு' என் றான். "அவள் கணவன் வரட்டும் சொல்கிறோம்' என் றார்கள்; அவன் ஒரு முரடன் என்று யாரோ சொன்னார்கள் அதற்குப் பிறகு அவளை மறந்து விட்டான். அவன் தாத்தாவுக்கு அவன் மீது ரொம்பவும் பிரியம். "தாத்தா! இந்தப் பாட்டிக்கு ரொம்பவும் வயசாகி விட்டது. நீ வேறு ஒரு கலியாணம் பண்ணிக்கோ' என்று கிண்டல் செய்தான். - 'வீடு போ போ என்குது காடு வா வா என்குது' என்றாள் பாட்டி. 'பாட்டி என்ன சொல்கிறார்?' 'நீ போய்வா; என்கிறாள்:” என்றார் அந்தப் பெரியவர்.