பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நவீன தெனாலிராமன் 'உனக்குக் கலியாணம் பண்ணி வச்சிட்டுத் தான் கண்ணை மூடப் போறேன்' என்றார் பாசத்தோடு. 'அது வரையும் எப்படித் தாத்தா கண்ணைத் திறந்து வச்சிக்க முடியும் உன்னால்?’ என்று கேட்டான். 'சீமடையா! நான் அதுவரை சாகமாட்டேன் என்று சொல்ல வந்தேன்' என்றார். நான் கலியாணமே பண்ணிக்க மாட்டேன்' என் றான. ‘'எதுக்கடா' என்று கேட்டார். 'நீ செத்திடுவே அதுக்குத்தான்' என்று பிரியமாகப் பேசினான் “தாத்தா! படிப்பு முக்கியமா? கலியாணம் முக்கிய மா?' என்று கேட்டான். 'படிப்புதான்' என்றார் தாத்தா. 'கலியாணம் தான்' என்றான் அவன். “எப்படிடா?' என்று கேட்டார். 'படிப்புகூட இல்லாமல் இருக்க முடியும்; யாராவது கலியாணம் இல்லாமல் இருந்திருக்காங்களா' என்று கேட் L_ssóðT. 'நீ புத்திசாலிடா” என்றார் அவர். இவனை அவன் தாயார் பால் வாங்கி வரச் சொன் 6õTf|TfT. ஆண்பாலா பெண்பாலா என்று கேட்டான். ஆவின்' என்றாள் அந்த அம்மையார். 'ஆ என்றால் பசு என்பது பொருள்; ஆவின் பால் என்றால் பசுவின் பால்' என்பது அவள் தந்த விளக்கம். "எங்க ஆசிரியர் இலக்கணம் படித்தவர்; ஆதலால் பால் ஐந்து வகைப்படும் என்று சொன்னாரம்மா' என் றான.