பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 171 "ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும் என்று சொன்னா ரம்மா' என்றான் அவன். 'இது ஆவின்பால் போய் வாங்கிவா என்றாள். கடைசியிலே அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தார்கள். இவன் பணம், அழகு, படிப்பு எதுவும் பார்க்க வில்லை. கல்யாணத்தைத்தான் பார்த்தான். தன் னைவிரும்பக் கூடியவள் இருந்தால் போதும் என்று எதிர் பார்த்தான். - 'அழகில்லாத ஒரு பெண் தேவை என்று விளம் பரம் தந்தான். ஒரு பெண் கூட விண்ணப்பம் போடவில்லை. 'சுமாரான அழகு இருந்தால் போதும்' என்று விளம்பரப்படுத்திப் பார்த்தான். அதற்கும் யாரும் வரவில்லை. 'மிகவும் அழகாக இருக்க வேண்டும்' என்று விளம் பரப்படுத்தி இருந்தான், ஐந்நூறுக்கு மேல் கடிதங்கள் வந்து குவிந்தன. மிகவும் மோசமான ஒரு பெண்ணைத் தேர்ந்து எடுத்தான். "அழகில்லை; அதனால்தான் உன்னை மணக் கிறேன்' என்றான். 'அதனால்தான் நானும் உங்களை ஒப்புக் கொண் டேன்' என்றாள் அவள். அப்பா வைத்து விட்டுப்போன சொத்து அவ னுக்குக் கை கொடுத்தது. கொஞ்சம் வசதியாகவே வாழ முடிந்தது. 'வண்டலூரில் மனை சரசமாகக் கிடைக்கிறதாம்” தேவி படித்து உரைத்தாள். அது அவன் மனைவியின் பெயர். அதனால் அவளை அவன் தெய்வமாக மதித்தான்.