பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நவீன தெனாலிராமன் 'வீடு கட்டப் பணம் வேண்டுமே” 'பாங்கியில் கடன் வாங்கிக் கொள்ளலாமே' 'கட்டிய வீட்டுக்கு யார் அங்கே குடி வருவார்கள்?' "யோசிக்க வேண்டிய விஷயம்தான்' அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. 'வர்ர அதிருஷ்டம் எங்கிருந்தாலும் வரும்' என்று சொல்வார்கள். அது போலத்தான் முகமூடிக் கொள்ளை யர்களும். 'தட்டுங்கள் திறக்கப்படும்' என்பது கிறித்துவ வேதவாக்கு: 'உடையுங்கள் திறக்கப்படும்' என்பது புதுதாக்கு. முகமூடிக் கொள்ளையர் உள்ளே நுழைந்தனர். இவனுக்கு ஒரு வியப்பு ஏற்பட்டது. தன்னை அவர் கள் மதித்து வந்தார்கள் என்பதால். தேவி நகைகளை எல்லாம் கழற்றி வைத்தாள். அவர்களைப்பார்த்துக் கேட்டான். 'நீங்கள் ஏன் முகமூடி அணிகிறீர்கள்'? என்றான். 'வருமான வரி அதிகாரிகள் என்று தவறாக நினைத் துக் கொள்ளக் கூடாது; உடனே பதுக்கி விடுவீர்கள். அதனால்தான்' என்றான். "எப்படி நீங்கள் கொள்ளையடிக்கும் பொருளைக் கணக்குக் காட்டாமல் பாதுகாக்க முடிகிறது?’ என்று கேட்டான். 'எங்களிடம் கொடுத்து விடு. நாங்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம்' என்று சொன்னார்கள். சனியன் விட்டது என்று அப்பா சேர்த்து வைத் திருந்த கருப்புப் பணத்தை வாரிக் கொடுத்து விட்டான். நான் கேட்கும்போது கொடுங்கள்' என்றான்.