பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 173 'நகைகளையும் கொடுங்கள்' என்று மருட்டினார் கள். 'நீங்களே எடுத்துக் கொள்ளலாம்' என்று மரி யாதையாகச் சொன்னான். சில விருந்துகளில் பரிமாறுவது இல்லை. அவர்களே விரும்புவதை எடுத்துக் கொள்கிறார் கள்; அதை இவன் பார்த்திருக்கிறான். 'பத்திரமாக எங்கள் லாக்கரில் இருக்கும்' என்றார் கள். ‘'தேவையில்லை; நகையில்லாமலே என் தேவி அழகு குறைந்தவளாக இருப்பாள்” என்று பதில் சொன் னான். - அதிருஷ்டம் தேடி வருதோ இல்லையோ துர திருஷ்டம் தேடி வரும் என்பதையும் கண்டு கொண்டான். "யாரவது என்னைத் தேடிக் கொண்டு வந்தால் இல்லை என்று சொல்லி விடு' என்று ஆபீஸ் டைப்பிஸ் டிடம் சொல்லி வைத்தான் ஐந்து மணிக்கு மேலே. 'நம்ப மாட்டார்களே' என்றாள். 'முதலில் நீ இடத்தைக் காலிப் பண்ணு நம்புவார் கள்' என்றான். ஒரு விபச்சார விடுதிக்குப் போனான். மாறு தலுக்காக. r 'எல்' போர்டு போட்டிருந்தது. தைரியம் இல்லை உள்ளே போக. 'வாங்க' என்று வரவேற்றாள். 'எல்” போர்டு; எனக்கு பயமாக இருக்கிறது” என்று திரும்பி வந்து விட்டான். 'எல்” போர்டு போட்ட காரில் ஏறமாட்டான். அதே பழக்கம் இவனைத் தடுத்துக் காப்பாற்றியது.