பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நவீன தெனாலிராமன் இதே போல மற்றொரு சம்பவம். கொஞ்சம் பாழடைந்த வீடு ஒதுக்குப்புறமாகவும் இருந்தது. விளக்கு சிகப்பாக எரிந்து கொண்டிருந்தது. 'டாக்டர் வீடா?' என்று கேட்டான். 'விலை மகள் வீடு' என்றாள். 'சிகப்பு விளக்கு எரிகிறதே! அதனால்தான் கேட் டேன்' என்றான். - 'இரண்டு இடங்களும் அபாயம் தான்; அதை அறிவிப்பதற்கு உங்களை வரவேற்கிறேன்' என்றாள். சிரித்தாள்; "வலது காலை வைத்து வரலாம்' என் றாள். அவள் தொழில் நடத்துபவள் என்று தெரிந்து கொண்டான். இவன் இடது சாரிக் கட்சிக்காரன்; அதனால் இடது காலை வைத்து உள்ளே நுழைந்தான். “இங்கே போலீஸ்காரர்?” 'வரமாட்டார்கள்' ‘'வேறு யாராவது?’’ 'உங்களைத் தவிர வேறு யாரும் இங்கே வர மாட்டார்கள்' என்றாள் அழுத்தமாக. அதுமுதல் அந்த ஆசை அவனை விட்டது. எதிர்வீட்டில் ஏந்திழையாள் ஒருத்தி குடி வந் திருந்தாள். கல்லூரிப் பழக்கம் கடைசி வரை இவனை விட வில்லை. அவளை அவ்வப்பொழுது பார்த்துக் கொண் டிருப்பான். தேவிக்கு சந்தேகம் வந்தது. அவளுக்கு இவளே அவன் பெயர் போட்டு ஒரு காதல் கடிதம் எழுதினாள். சாயங்காலம் ஐந்து மணிக்குத் தயாராக இரு. சினிமாவுக்குப் போகலாம்” என்று எழுதி அனுப்பினாள் வேலைக்காரி மூலமாக.