பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 175 இதை வந்தவுடன் அவனிடம் சொன்னாள். “என்ன ஆச்சு' என்று கேட்டான். "அதோ ஆள் தயாராக இருக்கிறாள் ஆடை அலங் காரத்தோடு' என்றாள். "ஏன் இப்படி எழுதினே?" 'உண்மையைத் தெரிந்து கொள்ள' அதுமுதல் அவன் எதிர் வீட்டுப் பக்கம் தலை வைத்துக்கூடப் படுப்பது இல்லை. இவன் தேவியை அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்தான். 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்று ஒரு வாசகம் எழுதி மாட்டி இருந்தான். பார்த்தாள்; இவனுக்கு ஒரு பாடம் கற்பித்தாள். வடை பாயசத்தோடு உணவு படைத்தாள். இவன் படம் முன்னால் வைத்துக் கர்ப்பூரம் காட்டினாள். இலை போட்டுக் கொண்டு அவள் மட்டும் சாப்பிட்டாள். 'பசிக்குது' என்று பரிதாபத்தோடு கேட்டான். 'தெய்வம் சாப்பிடாது; வழிபாடு போதும்' என் றாள். அந்த வாசகத்தை அந்த இடத்திலிருந்து நீக்கி விட்டாள். "உட்காருங்கள் சாப்பிடுங்கள்' என்றாள். அவனைக் கணவனாக மதித்து நடத்தினாள். அவன் சிகரெட்டு பிடித்தான்; அளவுக்கு அதிகமாகப் பிடித்தான்; அவள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்; அவன் கேட்கவில்லை. 'சிகரெட்டு பிடிக்காதீர்' என்று சொன்னாள்.