பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நவீன தெனாலிராமன் "Cancer வரும் என்று சொல்லப் போறே! அவ்வளவு தானே" 'நாற்றம் வருது; அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை; முகத்தை அணைக்க வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டாள். இந்தப் பிரச்சாரம் பலம் வாய்ந்ததாக இருந்தது. 'சிகிரெட் பிடிக்காதீர்; மனைவி விரும்ப மாட்டாள்' என்ற பிரச்சாரம் பயன் உடையது என்பதை உணரத் தொடங்கினான். அன்றிலிருந்து சிகரெட்டுப் பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டான். அடியோடு என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். 'உனக்கு தேவி என்று யார் பெயர் வைத்தது?” "எங்கப்பன் மூக்கையன் தான் வைச்சாங்க' 'மூ தேவி' என்று எழுத வேண்டி இருக்கிறதே' "அப்படியானால் என் பெயரை மாற்றிக் கொள் கிறேன்'. 'உன் அப்பனை மாற்றிக் கொள்; அது எளிது' என் றான். கலியான அழைப்பிதழ் வந்தது. 'மொழி விலக்கப்படவில்லை' என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தார்கள். அவன் அந்தக் கலியாணத்துக்குப் போகவில்லை. அவனுக்குப் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. Teen age நிகழ்ச்சி; நீச்சல் குளத்தில் நேரிழையாள் ஒருத்தி அடித்துச் செல்லப்பட்டாள்; அப்போது அவன் ஒரே பாய்ச்சலாகச் சென்று அவளைக் கரை ஏற்றினான்.