பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 177 முதல் உதவி செய்தான். கை, கால்களைப் பிடித்து விட் டான். மின்சாரம் பாய்ந்தது. அதாவது அவள் தன்னை விரும்பிக் காதலிப்பாள் என்று எதிர்பார்த்தான். சினிமாவில் பார்ப்பதுபோல் 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்றான். அவள் ஈரப்புடவையை மாற்றிக் கொண்டு வேறு புடவை உடுத்திக் கொண்டு வந்து நின்றாள். அதற்குள் அவன் காதல் உணர்வு உலர்ந்து காய்ந்து விட்டது. அவள் அவனுக்குச் சகோதரிபோல் காணப் L_! L_l_lfT@TT. 'நன்றி' என்று இவன் சொன்னான். 'உனக்கு என்ன பஸ் ஸ்டான்டில் வேலை?” 'பிடிச்சுட்டு நிற்கிறதுக்கு ஒரு போஸ்டு இருக்குதே அவ்வளவுதான். வேற ஒன்றும் இல்லை'. வசதி உடையவன்; அதற்கு விளம்பரம் அவன் வாங்கி வைத்திருந்த புதிய கார். தேவி கார் ஒட்டக் கற்றுக் கொண்டிருந்தாள். அவசரப்பட்டு அவளை நம்பி வெளியூருக்குப் போனான்; பிரேக் அவளைக் கைவிட்டது. "என்ன செய்வது' என்று கேட்டாள். 'பேசாமல் புளியமரத்தில் மோதி விடு' என்றான். “எதற்கு?' 'அதுக்கு இன்சூரன்சு அதிகம் கொடுக்க வேண்டி யிருக்காது' என்றான். சமாளித்துக் கொண்டாள்; புளியமரம் தப்பியது; காரும் தப்பியது; இவர்கள் உயிரும் தப்பியது. 'கார் ஷெட்டை இடித்துக்கட்ட வேண்டும்' என் றான்.