பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உறைத்தது பரிசு என்பது இன்று கொச்சைப்படுத்தப்படும் சொல். ஆசிரியர்களுக்கு முன்பு பரிசு தந்தார்கள்; இன்று வாசகர்களுக்குத் தரத் தொடங்கிவிட்டார்கள்; நாடகக் கலை ஞருக்குப் பரிசு தரப்பட்டது. அதைப் பொறுமையாகப் பார்க்கின்றவர்களுக்கு நஷ்ட ஈடு தரப்படுகின்றது. இதுவும் பரிசு என்றுதான் கூறப்படுகிறது. அவற்றின் தாக்கம் இவரையும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தச் செய்து இருக்கிறது. பரிசு அவளுக்கு விளங்கவில்லை. 'இனாம்' என்று எளிமைப்படுத்தி அந்தச் சொல் லைக் கூறுகிறார். 'கண்ணியம் என்னைத் தடுக்கிறது; நீங்கள் என்னை வைத்துப் புண்ணியம் தேடத் தேவை இல்லை' என்றாள் அவள். 'இல்லை; பண்டம் தேவை இல்லை; இது ஒரு பொருள் உதவி' 'பெண் ஒருத்தி பணம் பெறுகிறாள் என்றால் உங் களுக்குத் தெரியும்; அவள் தன் உழைப்பைத் தருவாள்; அல்லது அவள் தன்னைத் தருவாள்; வியாபாரம் உழைப்பு: விபசாரம் தன்னைத் தருவது; இதில் முதல் வகுப்பைச் சார்ந்தவள் இவள்; தவறான வழியில் இவளுக்கு ஈட்ட விருப்பம் இல்லை; நீங்கள் தருகிற நன்கொடை அது இன்றைய கலாச்சாரம்; ஒப்புக் கொள் கிறேன்; பழைய கலாச்சாரம் ஏற்பது இகழ்ச்சி'; அந்த மரபை மதிக்கிறேன். தயவு செய்து என்னை இழிவுபடுத்த வேண்டாம்; உங்கள் நோட்டை யார் இந்த அறிவுரை உமக்குத் தந்தார்களோ அவர்களிடமே தந்துவிடுங்கள். இதை அவர்களிடம் சொல்லிவிடுங்கள்' என்று நிதானமாகத் தான் நினைத்ததைச் சொல்லி முடித்தாள். அவள் உரைத்தது அவருக்கு உறைத்தது.