பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நவீன தெனாலிராமன் 'இன்னும் கொஞ்சம் இடியட்டும்; நான் முழுமை யாகக் கற்றுக் கொள்ளவில்லை” என்றாள். 'சரி மொத்தமாக இடித்து விடு; இடிக்கும் கூலி மிச்ச மாகும்' என்றான். அன்புள்ள தேவிக்கு என்று கடிதம் எழுதினான். இரண்டு நாள் தள்ளித் தேதியைப் போட்டு வைத்தான். 'ஏனுங்க தேதி தள்ளிப் போட்டீங்க?" "படிக்கும்போது நேரில் அப்பொழுதே பேசுவது போல இருக்க வேண்டுமே அதற்குத்தான். தபாலில் வந்து சேர இரண்டு நாள் ஆகுமே” என்றான். நான் ஊருக்குப் போனேனே எப்படித் தனியாக இருந்தீர்கள்?’’ ‘'வேலைக்காரி இங்கே தனியாக இருந்தாள்; அவளுக்குத் துணையாக நான் இருந்தேன்' என்றான். 'நீங்க என்னை நினைக்கிறது உண்டா?” 'உன் நினைவைத் தவிர வேறு எதுவும் இருப்பது இல்லை. எப்போ திரும்பி வந்துவிடுவியோ என்ற பயம் இருந்தது.” 'ஏனுங்க lipstick கை காணோம்' "என் உபயோகத்துக்கு எடுத்து வச்சிருக்கேன்' 'உங்களுக்கு எதுக்கு?' 'யார் பூசிக் கொண்டாலும் ஒன்னுதானே. அதனால் தான்'. 'ஏனுங்க நம்ம கலியான போட்டோவைக் காணோம்.' 'எடுத்து வச்சிட்டேன்' 'இவள்தான் உங்க மனைவியா என்று துக்கம் விசாரிக்கிறாங்க” 'ஏன்? எதுக்கு? எனக்கு என்ன குறை?'