பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 185 'இனிமேல் சொல்றேன்; நீ எதாவது சொல்லு வியேன்னு பயந்தேன்!' 'கடற்கரை பீச்சுக்குப் போகலாமா?” ‘'எதுக்கு?” "மலரும் நினைவுகள் பேசுவதற்கு' 'இதோ பாருங்க ஒரு சோப்பு வாங்கினால் ஒரு டி.வி. இனாம்.' "சோப்பு விலை?” 'பத்தாயிரம்' 'டி.வி. மட்டும் வாங்கிக்கலாம்; போதும்' 'ஏன் உங்க நண்பர் காஃபி சாப்பிடாமல் போயிட் L_ssir'’ 'எனக்கு நீ போட்டு வைத்த காஃபின்னு சொன் னேன்; அவ்வளவுதான்' 'ஏன் தனியா சிரிக்கிறீங்க” 'உன்னைப் பார்த்துச்சிரிக்க முடியாததால் தான்' 'ஏதாவது இப்படி அனுபவம்?” "அதை ஏன் கேக்கறே : ஒரு பெண்ணைப் பார்த்துச் சிரித்தேன்; அவள் என் கன்னத்தைத் தடவிக் கொடுத்தாள்; அதனால்தான்' 'fat சாப்பிடாதீங்க கொலஸ்ட்ரால் வரும்' 'சர்க்கரை போட்டுக்காதீங்க டையாபிட்டீஸ் வரும்” 'உப்பு சேர்த்துக்காதீங்க நமைச்சல் வரும்” 'பின் என்ன தான் சாப்பிடச் சொல்றே? 'போட்டதைச் சாப்பிடுங்க எதிர் பேசாமல்” "எப்ப பார்த்தாலும் பணத்தையே எண்ணுகிறீங் களே ஏன்?'