பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 191 'ஒரு நூறு ருபாய் இருந்தால் கடனாத்தரமுடியுமா?” 'நூற்று ஒன்றுதானே இருக்குது' ‘'வேணாம்; வேறு எங்காவது கேட்டு வாங்கிக் கிறேன்' 'அடுத்தது ஆணா பெண்ணா?” 'பெண்தான் வேணும்; அவள் தான் பிற்காலத்திலே சம்பாதிச்சுப் போடுவாள்' 'நீ என்னோட சினிமாவுக்கு வர்ரியா?" 'அத்திப்பூத்தாப் போல இருக்குதே' "கியூவிலே நின்று டிக்கட் வாங்கணும் ' 'என்னடா தாடி மிசை?' 'அய்யப்பன் யாத்திரை' 'இது என்ன இதைத் தேர்ந்து எடுத்தே' "கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்க' 'விளங்கலையே?’’ 'என்மனைவி என்னோடு அங்கு வர முடியாது' அவன் மனைவி சுகமில்லாமல் இருந்தாள், நர்சிங் ஹோமில் அடைக்கலம் புகுந்தாள்; இவனுக்கு அவள் கவலையே பெரிதாக இருந்தது. டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள் இவனிடம் உள்ள காசு காலியாகி விட்டதால். சார் என் மனைவி பிழைப்பாளா?' "தைரியமாக இருக்கலாம்; இனிப் பிழைக்கமாட்டாள்' என்று சொல்லிவிட்டார்கள். 'என்ன சார் செய்வது?"