பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நவீன தெனாலிராமன் 'கடவுளிடம் பிரார்தனை செய்து கொள்; அது தான் காசு செலவழிக்காமல் இருக்க ஒரே வழி' 'அவள் பிழைக்க வேண்டாம் என்றா?' 'அதற்கு நாங்கள் இருக்கிறோம்; பிழைக்க வேண் டும் என்று” 'என்னங்க டாக்டரிடம் பேச்சு?’’ 'உன்னிடம் பேச முடியாததால் தான்; நீ போன பிறகு நான் என்ன செய்ய முடியும்?' 'இடுக்கண் வருங்கால் நகுக, வள்ளுவர் சொல்லி இருக்கிறார் 'வந்த பிறகு என்ன செய்வது?” 'நீங்கள் அழ நான் பார்க்க மாட்டேன்' அவள் மூடிய கண்களைத் திறக்கவில்லை. காலம் சுழன்றது, மகனும் மகளும் பேரப் பிள்ளை களை அவர் வேண்டிய அளவுக்குப் பெற்றுத் தந்தார்கள். அவர்கள் இவனைச் சிரிக்க வைத்தார்கள். இவன் சிரித்தான்; மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடியவில்லை. பாட்டி எங்கே என்று கேட்டார்கள். கூடத்தில் மாட்டி வைத்த படத்தைக் காட்டினார். 'பாட்டி கதை சொல்லுவார்களா தாத்தா?' என்று கேட்டார்கள். ‘'சிரிக்க வைத்தாள்' என்று சொல்லி முடித்தார். 0 مليS స్ద