பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18  சொந்த வீடு  நண்பர்கள் இவனைத் தூண்டினார்கள் “போட்டுப் பாரு, அதிர்ஷ்டம் அடிக்கும்” என்று ஊக்கம் தந்தார்கள்.

விண்ணப்பப் படிவம் பத்து ரூபாய்தான்; அதில் சிரமம் இல்லை; மிகையாகவே ஒன்று வாங்கி வைத்தான். ஒன்று கெட்டால் கூட மற்றொன்று உதவும். இப்படிச் சிலர் அதிக கவனம் செலுத்துவது உண்டு; இவனும் அதைப் போலச் செய்தான். இவனுக்கு அரசு பணி இருந்தது. அதுவும் ஒரு அடிப்படை நிரந்தர வருவாய் எதிர்பார்க்கப்பட்டது; அதற்கு உரிய நற்சான்று முறைப்படி வாங்கிப் பிணைத் தான். இவன் போட்டுவிட்டு அதை மறந்துவிட்டான்; 'அக்கரைப் பணம்’ என்று ஒரு ஆயிரம் அதற்கு டிராப்டு' வாங்கி இணைத்திருந்தான். கிடைக்காவிட்டால் அவர்கள் திருப்பித் தந்துவிடுவார்கள். எந்த நஷ்டமும் இல்லை. அதில் குடி புகுந்தால் தவணை முறையில் ஆயுளில் கால்பங்கு கட்டிவந்தால் வீடு சொந்தமாகிவிடும் என்று தெரிவித்திருந்தனர். குலுக்கல் முறையில் இவன் எண் விழுந்தது; இனி அவன் தப்ப முடியாது; ஆசை யாரை விட்டது; தானாக வந்த சீதேவி, அவளை எப்படி எட்டி உதைக்க முடியும்? அவனுக்கு ஒரு பெண் பிறந்திருந்தது. அவள் பிறந்த அதிருஷ்டம் என்று அவனுக்கு ஆறுதல் கூறிச் சமாதானப் படுத்தியவர் பலர்; அவள் பிறந்ததால்தான் வீடு கிடைத்தது என்பார் சிலர்; வீடு கிடைத்ததால்தான் அவள் பிறந்தாள் என்பார் சிலர் அவனுக்கு அந்தப் பெண் குழந்தை மேல் பாசம் கூடுதல் ஆவதற்கு அதுவும் துணை செய்தது. அதில் தான் குடி புகுந்தால் தவணை முறையில் 'டியூக்களைக் கட்ட முடியுமா? வெளியாருக்கு விடுவது