பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 19 அதிகார பூர்வமாகத் தடை செய்யப்படவில்லை. செயல் முறையில் யாரும் தடுக்கவில்லை. நூற்றுக்குத் தொண் ணுறு பேர் வாடகைக்குத்தான் விட்டார்கள் என்று பேசிக் கொண்டார்கள். யார் அந்தப் பொட்டல் காட்டுக்குப் போக முடியும்? இருக்கும் இடமே எல்லாவற்றிற்கும் சவுகரியமாக இருந்தது; சாக்கடை நாற்றம்தான்; மற்றபடி ஆபீசுக்கு, குழந்தையைச் சேர்ப்பதற்கு, மார்க்கட்டுக்கு, மற்றபடி பழகி விட்ட இடம்; அதை விட்டு எப்படிப் போவது? எப்பொழுதோ விட்ட இடம்; பழைய குடிக்கூலி, ஏற்ற முடியாது; வீட்டுக்காரர் தொந்தரவு கிடையாது. எம்.ஒ. அனுப்பினால் போதும்; பொங்கலுக்கு இவர்களே சொந்தச் செலவில் சுண்ணாம்பு அடித்துக் கொள்வார்கள். அது ஒன்றுதான்; மற்றபடி அதைவிட்டு வரத் தேவையில்லை; இது அவர்கள் மதிப்பீடு. அதன் தொகையைக் கட்டுவதற்கு முன் நல்ல விலை வந்தால் விற்றுவிடுவது என்றும் பேசிக் கொண்டிருப்பான். கட்டிய மனைவி அவளை எப்படிக் கழற்றிவிட முடியும்? அந்த வீடு ஒட்டி அவனிடம் உறவு கொண்டு விட்டது. அவன் ஒரு வீட்டுக்கு 'ஒனர்', உயரிய பதவி. தனக்குச் சென்னையில் ஒரு வீடு இருக்கிறது என்றால் அது தனி கவுரவம்; மதிப்பு: ஒரே ஒன்று:இங்குக் குடி புகுவதென்றால் ரேஷன் கார்டு மாற்ற வேண்டிய தொல்லை; அங்கேயே பழைய இடத்தில் தங்கிவிடுவது என்று முடிவு செய்தான். அவனும் அவன் மனைவியும் புதிதாக அவதரித்த சின்ன பெண்ணும் அடிக்கடி வாக்கிங்க்' போக அந்த இடம் ஒரு எல்லையாகப் பயன்பட்டது. அதற்காக ஆகும் ஆட்டோ செலவை அவர்கள் பொருட்படுத்தவில்லை.