பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 21 அதை அவன் மாற்றி அமைக்க வேண்டி இருந்தது. கதவுகளுக்கும் சன்னல்களுக்கும் கொக்கிகள் போட்டான். காற்றில் கதவு அடித்துக் கொண்டிருந்தது. எல்லாம் காட்டு மரம்; பெயிண்டு அடித்தால்தான் அது அவன் தவணை கள் கட்டி முடிக்கும் வரை தாங்கும்; 'ஏன்டா கை வைத்தோம்' என்று ஆகிவிட்டது. ஊதாரி ஒருத்தியை மணம் செய்து கொண்டு வேதனைப்படுவது போல அவன் நிலைமை ஆயிற்று. எதிர்பார்க்கவில்லை; கை வைத்தால் அது எங்கேயோ கொண்டு போய்விட்டது. "பொறுத்திருங்கள்; நல்ல விலைக்கு விற்கலாம்; இங்கு மீன் மார்க்கெட் வருகிறது. கேரளாவில் பிடிக்கும் மீன்கள் இங்கு வைத்து விற்கப் போகிறார்கள். காவிரி தண்ணிர் திறந்து விட்டிருக்கிறார்கள்; மீன்களும் மிகுதி யாகிவிடும். எங்குப் பிடிக்கிற மீன்களும் இங்குதான் வரவேண்டும்' என்று ஆருடம் கூறினர். 'காய்கறி மார்க்கட்டு வந்தது; நூறு அடி ரோடு போட்டார்கள். போதவில்லை; இங்கே இரு நூறு அடிக்கு அகலமான பாதை போட இருக்கிறார்கள். இனிமேல் இந்த நகரத்துக்கு இந்த அளவு ரோடுகள் தேவை; நெருக்கடி அதிகம் ஆகப்போகிறது; இந்தச் சென்னை மும்பை, கல்கத்தா ஆகப் போகிறது. நெருக்கடியில் சாகப் போகிறார் கள் என்று தைரியம் தரப்பட்டது. பின்னால் தெரியும் இது; வளரும் தமிழில் புதுக் கவிதைகள் கதைகள் இடம் பெறும் என்று சொல்வதைப் போல அவர்கள் நம்பிக்கை உரை இருந்தது. 'வீடு காலி’ எப்படி விளம்பரம் செய்வது? ஆங்கில ஏடுகளில் தந்தால் கட்டுப்படி ஆகாது; அதிகம் செல வாகும்; மூன்று வரிதான்; மூந் நூறுக்கு மேல் கேட்பார்கள். இவ்வளவு தொகை கொடுப்பதா? கண்டவர்கள் எல்லாம் வீடு கேட்டால் என்ன செய்வது?