பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சொந்த வீடு பத்திரிகையில் விளம்பரம் தந்தால் தொலைபேசி எண் தர வேண்டும்; இவன் நண்பர் வீட்டு எண் தந்தால் அவர் இதற்குச் சம்மதிப்பாரா? ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்; சில சமயம் தொடர்ந்து ஒரு வாரம் நீடிக்கும்; மழை விட்டாலும் தூவானம் விடாது. அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் என்ன கேட் பார் கள்? எத்தனை 'பெட்ரும் இருக்கிறது என்று கேட்பார் கள். இரண்டு பெட்ரும் என்று எப்படிச் சொல்ல முடியும். இருக்கிற ரூம்கள் எல்லாம் பெட்ரூம்தானா? ஒரு பெட்ரும் தான் இருக்கிறது. 'பாத்ரும் ஒட்டு இருக்கிறதா என்று ஒட்டுக் கேட்பார்கள். 'பொது உடைமை' என்றால் அந்தச் சொல் ஒரு சிலருக்குப் பிடிக்காது. அந்தக் கட்சி இன்று செல்வாக்குப் பெறவில்லை என்பது அவன் கணிப்பு. தீவிரவாதிகள் அவர்கள் யாராவது வந்து கேட்டால் என்ன செய்வது; அவர்களுக்குத் தந்தாலும் தொல்லை; தராவிட்டால் அவர்கள் விடமாட்டார்கள். வரும்போது அவர்கள் தாம் யார் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டா வருகிறார்கள்! 'ஒற்றைக்கண்' இருந்தால் அடையாளம் காண முடியும். அவர்கள் நெற்றிக் கண்ணோடுதானே வருவார்கள். இந்த அச்சம் விளம்பரம் தருவதைத் தடுக்கிறது. 'அதெல்லாம் வேண்டாங்க ஒரு டு லெட் பலகை எழுதி மாட்டி விடுங்கள் போதும். அதுவும் பழைய காலண்டர் அட்டை அதன் பின்புறம் அழகாக எழுதுங்கள்; கயிறு கூடத் தேவையில்லை; அதிலேயே இருக்கும்; துளைகளாவது இருக்கும்; மாட்டி விடலாம்” என்று ஆலோசனை கூறப்பட்டது. 'ஆங்கிலத்தில் எழுதினால் ஐந்து எழுத்து; பஞ்சாட்சர நாமம்; அதை இந்திய மையில் எழுதுங்கள்; அழியாது' என்றாள்.