பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சொந்த வீடு கலியாணம் ஆகிய காலத்தில் இவர்களுக்குத் தரகர் கள் உதவினார்கள். அந்த நன்றியை இவர்கள் மறக்க வில்லை; எல்லாவற்றிற்கும் இன்று தரகர்கள் செயல்படு கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்த ஒன்று; தரகர்கள் இல்லாமல் அவர்களுக்கு அந்த வீடு கிடைத்தது ஒரு விதி விலக்கு என்று பேசினார்கள். அந்த 'டு லெட் பலகை அதிசயப் பிறவியாக அங்கே தொங்கவிடப்பட்டு இருந்தது. ஒரு கால் அல்லது கை அதிகம் முளைத்து விட்ட குழந்தையைப் பார்ப்பது போல் அதைப் பார்த்துச் சென்றனர். 3. 'யார் சார் எழுதியது" தொடங்கியது. என்று முதலில் விசாரணை எழுத்துப் பிழை இருக்குமோ என்று அந்த வினா அஞ்ச வைத்தது. 'இல்லை சார்; எழுதியது அழகாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்தப் புது வீட்டை நோக்கி இவர்கள் படை எடுக்க நேர்ந்தது; தேர் ஏறிச் செல்லும் அரச குமரர்கள் போல் அடிக்கடி ஆட்டோவில் செல்ல நேர்ந்தது. ஆட்டோ டிரைவர் ஒருவர் மேலே போட்டுக் கொடுத்ததை மறுத்துவிட்டார். அது அவர்களுக்கு வியப் பைத் தந்தது. "எங்கள் சங்கம் செய்த முடிவு இது. அதிகம் வாங்க மாட்டோம்” என்று அடித்துக் கூறினார். ஊழலின் ஆணிவேர் அகல்கிறது என்ற எண்ணம் அது தோற்றுவித்தது.