பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 25 அந்த வீடு ஒரு மாதம் காலியாகக் கிடந்தது. மணமான புதிய தம்பதிகளைப் பிரித்து வைக்கும் ஆடி மாதம் அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது. நல்லது நடக்க இந்த ஆடிமாதம் ஏன் தடையாக இருக்கிறது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. பாத்ரும் ஒட்டி இல்லை என்று எட்டிப்பார்த்தவர்கள் அதை ஒரு பெரிய குறையாகச் சுட்டிக் காட்டினார்கள். அதற்கு அவர் ஸ்பார்டெக்ஸ் கல் பதித்து இருந்தார். அதற்குப் பாராட்டும் கிடைத்தது. என்றாலும் அது ஒட்டி உறவு கொள்ளவில்லை என்ற குறை சுட்டப்பட்டது. "நாங்கள் பேச்சிலர்கள்; எங்களுக்கு வீடு விட முடியுமா?’ என்று விசாரித்தார்கள் சிலர். 'உங்களுக்குக் கலியாணம்?' "எங்களுக்கு இப்பொழுது தேவை இல்லை; தேவைப்படும் போது தெரிவிக்கிறேம்; நாங்கள் இரண்டு மூன்று பேர் சேர்ந்து எடுத்துக் கொள்கிறோம்' என்று உரைத்தனர். யாரும் வராவிட்டால் அவர்களுக்கே தருவது என்று நிச்சயிக்கப்பட்டது. கடைசி வரை அவர்கள் பாச்சிலர்களாக எங்கே இருக்கப் போகிறார்கள். ஆட்கள் மாறிக் கொண்டு இருப் பார்கள்; யோசிக்க வேண்டியது தான் என்று விட்டு வைத்தார்கள். 'கணவன் மனைவி இரண்டே பேர்” என்று அறி முகம் செய்து கொண்டு வந்து பேசினார்கள். 'வீட்டைச் சுத்தமாக வைத்திருப்போம்” என்று உறுதி மொழி தந்தார் கள். 'இவர்கள் மூன்று பேர் ஆவது விரைவில்; குழந்தை இருக்க வேண்டியதுதான். அவர்களுக்கே விடுவது' என்று தீர்மானிக்கப்பட்டது.