பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சொந்த வீடு பதிவு அஞ்சல் சட்டக் கல்லூரியில் படித்ததற்கு அடையாளமாக வழக்கு அறிந்தவர் தன் பெயரோடு பட்டமும் சேர்த்து அச்சு ஏட்டில் அனுப்பி இருந்தார். 'வீட்டுக்காரர் தன் சொந்தத்துக்கு இவர்களுக்கு விடப் பட்டிருந்த வீடு இப்பொழுது தேவை” என்று எழுதியிருந்தார். அதை அவர் நியமித்தவக்கில் தெரி வித்தார். 'நீர் சொந்த வீடு வைத்திருப்பதால் மறுப்புக் கூறமுடியாது; எங்கள் சொந்தத்துக்குத் தேவை என்று காரணம் காட்டிக் கேட்கப்பட்டு இருந்தது. காலத் தவணை வேறு கொடுக்கப்பட்டிருந்தது. காலி செய்யாவிட்டால் வழக்குச் செலவும் கட்டித்தர வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதிவு அஞ்சல் செலவும் அதனுள் அடக்கம் என்பது தெரிந்த ஒன்று. இந்த அதிர்ச்சியைத் தாங்க இயலவில்லை. குலுக்கல் முறையில் எது வந்தாலும் அது சங்கடம்தான். ஏற்கக் கூடாது. சவுகரியமாக இருந்த வீடு; வருங்கால மீன் மார்க்கெட்டு வளாகத்துக்குப் போய்த்தான் தீரவேண்டும். 'சரி! நம் சொந்த வீடு' ஆறுதல் மொழி அவர்களை அமைதிப்படுத்தியது. யாரும் அவர்களை வெளியேறச் சொல்லமாட்டார்கள். 墨