பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 29 படித்து புரோகிரஸ் ரிப்போர்ட்டில் முதல்' அல்லது இரண்டு இப்படியே விளக்கம் பெற்று ஒளிவிட்டன. தை மாசங்கள் கடக்கின்றன. 'இப்பொழுது என்ன அவசரம்? அடுத்த தைக்குள் முடித்துவிடலாம் 'என்று கூறி வந்தார். - - 'இனி மேலா ஒருத்தன் பிறக்கப் போறான். ஏற் கெனவே பிறந்திருக்கிறான்' என்கிற அபார உண்மையை அடிக்கடிச் சொல்லி வந்தார். 'அப்படிப் பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை; யார் பார்த்தார்கள்' என்று கூறினார் இவர். அது இருவருக்கும் சிரிப்பை உண்டாக்கித் தந்தது. "எப்படி? சாதிக்குள் தானே?” 'நாங்க அவ்வளவு தூரம் முன்னேற்றம் அடை யலை. உள்ளுரிலேயே ஒரு ஒணானைப் பிடிக்க வேண்டி யதுதான்; நமக்கு வெளியூர் கட்டுப்படியாகாது. முறை யிலே பார்த்தோம். உறையிலே இருக்கிற வெண்ணெய் மாதிரிதான்; எவன் சரியாப் படிக்கிறான். நம்ம பெண் ணுக்குப் படிச்சவனை எதிர்பார்க்கிறோம். கேட்கிறதைக் கொடுத்துவிடலாம். இப்படி அவர் பேசி வந்தது கேட்டுக் கேட்டுப் பழைய பாட்டாக ஆகிவிட்டது. "புதிய பாடல் அது ஏதாவது?" 'முடியட்டும் சொல்றேன். உனக்குச் சொல்லாமலா நடக்கப் போகுது. நீ வராமல் நடக்கவே நடக்காது' என்று உறுதி அளித்தார். அடுத்தவள் கலைமகள். சரஸ்வதி அதை மாற்றி அவர் வைத்த பெயர் 'கலா', பதிவில் கலைமகள்; ஒவ்வொருவரும் கூப்பிட்டது 'கலா' என்பதுதான். இரண்டுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இல்லை; விளம்பர இடைவெளிதான். அதிகம் இல்லை; அடுத்த