பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 33 நாட்டில் படிக்கிறார்கள. இவர்கள் இங்கே உருவாக்கப்படு கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிநாடுகளுக்குச் சேவை செய்கிறார்கள். இன்று இந்த மோகம் மிகுந்துவிட்டது” என்று எடுத்து உரைத்தார். 'இன்று இளைஞர்களுக்கு நாட்டுப் பற்று இல்லை; தம் வாழ்வு அதுதான் அவர்கள் நினைக்கிறார்கள். அந்த அலையோட்டத்தில் இவளும் ஒருத்தி' என்று நியாயப் படுத்தினார். 'இளைஞர்களைப் பயன்படுத்த நாடு தவறி விட்டது” என்று உரைத்தார் இவர். 'இல்லை; இவர்கள் அந்நியச் செலாவணி ஈட்டு கிறார்கள்; அதனால் இந்த நாடு நன்மை அடைகிறது” என்று சாதித்தார். அவரைச் சந்தித்து மூன்று காலண்டர்கள் மாறி விட்டன. "எப்படி உங்கள் கடைசிப் பெண்” இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. "அவள் அங்கேயே செட்டில் ஆகிவிட்டாள்' "பையன் ?” 'அவன் அந்த நாட்டு மண்ணின் மைந்தன். அமெரிக்கக் குடிமகன்' தமிழ்மகன் இங்கு இவர்; அங்கு அவர் மருமகன் அமெரிக்கக் குடிமகன். அவர் எப்படி ஏற்றுக் கொண்டார்? விளங்கவில்லை. 'நீங்கள் தடுத்து நிறுத்தி இருக்கலாமே” - "என் உபதேசம் சில பேருக்குத்தான் எடுபடும். மொழிப் பற்று, நாட்டுப்பற்று இவற்றை வற்புறுத்து