பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 35 'உறவாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்; குடும்பம் சந்தோஷமாய் இருக்க வேண்டுமானால் குழந் தைகளைப் பெறுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டது' திருமணமே இந்தக் குழந்தைகளைப் பெறுவதுதான் என்பது தவறான கருத்து. பாட்டனும் பாட்டியும் கேட்டுக் கொள்வது அவர்கள் எடுத்துப் பராமரிக்க ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்; என்பது அவர்கள் வேண்டுகோள் இது. இது தவறான கருத்து. 'நாட்டின் பொருளாதாரம் இந்தக் குழந்தைக் குறைப்பை எதிர்நோக்கி இருக்கிறது. முதியவர்கள் இன்று விரைவில் சாவை எதிர் நோக்குவது இல்லை. மருத்துவ மும், வசதிமிக்க வாழ்க்கையும் அவர்களை எண்பது, தொண்ணுறு என்று எண்களை எண்ண வைக்கிறது'. 'பழங்காலத்தில் ஐம்பது அறுபது அதற்குள் அவர் கள் முடித்துக் கொண்டார்கள். குழந்தைகள் குறைப்பது தேவைப்படவில்லை. இன்று எண்ணிச் செயல்பட வேண்டி யுள்ளது'. 'அரசியல்வாதிகள் விழிப்போடு இருக்கிறார்கள்; போரைத் தவிர்க்கிறார்கள். அதனால் அழிவுகள் மிகவும் குறைவு'. 'இன்று வறுமை, வேலையின்மை, நாட்டைப் பிடித்த நோய்கள் இவை, மக்கள் எண்ணிக்கை லட்சம், கோடிகள் என்ற எண்ணைத் தொட்டுவிட்டது'. 'வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் அவர் கள் வேறு நெருக்கடி. வங்காள தேசம் அங்கிருந்து வந்தவர்கள், கடல் கடந்து குடியேறிவர்கள் இவர்களுக் கெல்லாம் புகலிடம் தரவேண்டியுள்ளது'. 'திட்டமிட்ட வாழ்க்கை இன்று தேவைப்படுகிறது. மணமக்கள் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். தாம்பத்திய