பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தவறு திருத்தப்பட்டது வாழ்வுக்குக் குழந்தைகள் தேவை என்பது பழைய கருத்து. உறுதியாக இருங்கள். பெறுவதைத் தவிர்க்க: ஒருவர் இருவராவது வழிகாட்டுங்கள்'. மைக் அலற அவர்கள் கூறிய கருத்துகள் ஆழப் பதிந்தன. முதலில் இவர்கள் தவிர்த்தார்கள். பின் இவர்கள் முயன்றார்கள். குழந்தைகள் இவர்களைத் தவிர்த்தன. வறண்ட மண் அதில் பயிர் விளையவில்லை. இந்தச் சொற்பொழிவு நடந்தது முப்பது ஆண்டு களுக்கு முன். அவர்கள் கட்டிய வீடு சுத்தமாக இருந்தது. தெய்வப் படங்களை நிரப்பி அந்த வீட்டை நிறைவு செய்தார்கள். பகுத்தறிவுச் சொற்பொழிவு அவர்கள் கேட்டது; அது அவர்களை அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் ஆக்கி யது. சேர்த்து வைத்த பணம் அந்தக் கட்டிடத்தில் மேலும் சில அறைகளை விரிவுபடுத்தின. தமக்குத் துணை தேடினர். குறைந்த எண்ணிக்கை உடையவர்களை அவர்கள் குடியமர்த்தினர். அவர்கள் இவர்களுக்குத் துணை நின்றனர். மருத்துவமனையில் இவர்கள் நுழைவுச் சீட்டுப் பெற்ற பொழுதெல்லாம் கட்டுச் சோறு கொண்டு வந்து தந்தார்கள். 'யார் இவர்கள்?” 'குடித்தனக்காரர்கள்' இப்படி இவர்கள் அறிமுகம் செய்விக்கப்பட்டனர். அவர்கள் வீடு ஒரு ரயில் பெட்டி வருவார்கள்; தங்குவார்கள்; பயணம் முடிந்ததும் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். இந்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் சொந்த வீடு கட்டிக் கொண்டு போய் விட்டார்கள். அது அந்த "வீட்டு ராசி' என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.