பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 37 இப்பொழுது அவர்கள் தேர்ந்து ஏற்றுக் கொண்டது ஒரு புருஷன் அவனுக்கு ஒரு மனைவி. அவர்கள் காதலித்து மணம் செய்து கொண்டவர் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டர்கள். அதற்குத் தண்டனை தான் அவர்கள் அங்குத் தனிக் குடித்தனம் அமைத்தது. நிலையான ஆட்சியைத்தான் இம் முதியவர்கள் விரும்பினார்கள். அவரவர் மாற்றலாகிச் சென்று கொண்டே இருந்தனர். இவர்கள் வந்தவர்கள் ஒரிரு மாதங்களிலேயே வாக்கு வாதங்கள் தொடங்கி இவர்கள் இடையீட்டை எதிர்பார்த்தனர்; இவர்கள் சமாதான முயற்சி அவர் களுக்குத் தேவைப்பட்டது. சில சமயம் தட்டுகள் பறந்து வெளியே வந்து விழுந்தன. பறக்கும் தட்டுகளைப் பார்த்தனர். அவற் றிற்குச் சிறகுகள் இல்லை; தாமாகப் பறந்து வந்து விழ வில்லை. மாறுபட்ட கட்சிக்காரர்கள் கூட்டு அரசியல் நடத்து வதுபோல அவர்கள் பேச்சு வார்த்தைகளில் கருத்து வேறுபாடுகள் நிலவின. "மைக்கை எடுத்து வீசினர்; கைக்கு வந்தவற்றைக் கிழித்து எறிந்தனர்' என்ற செய்திகள் வர அது பாராளு மன்றம் அல்ல. தட்டு முட்டுகள்தாம் தாளம் போட்டன. முகங்களில் கோணல்கள் அவர்கள் முணுமுணுப்பைத் தெரிவித்தன. ஐ.நா.சபை அவர்களுக்குத் தேவைப்பட்டது. இவர் கள் முறையிடாமலேயே இவர்களின் குறைகளைக் கேட்க அப் பெரியவர்கள் வந்தனர். "காதலித்துத் தானே திருமணம் செய்து கொண் டீர்கள்?’’