பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தவறு திருத்தப்பட்டது 'அவ்வளவு முட்டாள்கள் அல்ல; என் பெற்றோர் கள் முனையவில்லை; அவர்களால் இயலவில்லை; நானே அவரைத் தேர்ந்தெடுத்தேன்; அவ்வளவுதான்' என்றாள். தேர்ந்தெடுப்பது எல்லாம் காதல் திருமணம் அல்ல என்பது அவர்கள் சொல்லித்தான் அவர்களுக்குத் தெரிந்தது. எதிர்கட்சியின் வாதம் அதைக் கேட்க விரும்பினர். 'இன்று மண வாழ்க்கை வெறும் ஒப்பந்தம் தான். அரசியல் கூட்டு எப்படியோ அப்படித்தான்'. நான் விரும்பியவள் அவள் என்னை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அப்படி அவளும் ஒப்புக் கொண்டிருந்தால் அது காதல் கலியாணம்தான்.” 'வேறு வழி இல்லை. இவளோடு கூட்டுச் சேர்ந் தேன். அவசியம் அவளோடு என்னை இணைத்தது” என்று விளக்கம் தந்தான் அவன். 'அரசியலில்தான் கொள்கை இல்லை; எதுவும் நிரந்தரம் இல்லை என்று வாய் கூசாமல் கூறுகிறார்கள்.' & 4 எது எப்பொழுது முடிவு எடுப்பது? எது சரி? என்ற வாசகம் இங்கும் சேர்ந்துவிட்டது.' 'காரண காரியங்கள் செத்து விட்டன. எது நல்லது என்பது சூழ்நிலைதான் முடிவு செய்கிறது. இதுதான் எங்கள் உறவும்” என்றான் அவன். அரசியல் அவனைப் பெரிதும் ஆட்கொண்டுள்ளது என்பது தெரிய வந்தது. எதையும் அரசியல் பரிபாஷை யிலேயே அவன் விளக்க முற்பட்டான். அவர்கள் கருத்து வேறுபாடு காவிரிப் பிரச்சினை அல்ல; வேலைக்காரி மாற்றம் செய்தது அல்ல. ஏதோ அடிப்படைக் கொள்கைப் பிரச்சினை என்பது தெரிந்தது.