பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 39 அவசரப்பட்டு இவர்கள் எந்த முடிவும் சொல்ல முன்வரவில்லை. 'கருவைக் கலைக்க வேண்டும் என்பது என் கருத்து. அதை வற்புறுத்துகிறேன். அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை' என்றாள் அவள். . ஆட்சிக் கலைப்புப் பிரச்சினை போல் இது அவர்கள் எடுத்துக் கொண்டது. 'பெண் தாய்மை அடைவதுதான் அவள் வாழ்வின் நிறைவு; குடும்பப் பிணைப்புக்குக் குழந்தை தேவை. இது என் கருத்து' என்றான். மறுபடியும் அவள் பேசினாள். 'தாய்மைப் பேறு இயற்கை தந்த வரம்; பெண்ணுக்கு அது அவள் உடற் கூறு; பேதமே இதில்தான் படைப்பில் அமைந்துள்ளது. ஒப்புக் கொள்கிறேன்” . 'கரு ஏற்றுக் குழந்தை பெறுவதும் பெற்றுக் கொள்ளாததும் என் விருப்பம். இயற்கை கட்டுப்படுத்த வில்லை'என்றாள் அவள். இறைவனை அப் பெரியவர் வாதத்திற்கு அழைத் தார். 'பெண் தாய்மை அடைவது பரிணாம வளர்ச்சி, அது தேவையில்லை என்றால் திருமணமே தேவை இல்லை; இருவர் பிணைப்பு அர்த்தமற்றது. ஒவ்வொரு பெண்ணும் குழந்தைக்குத் தாய் ஆவது ஆண்டவன் கட்டளை' என்றார். பத்துக் கட்டளைகளை அவர் படித்தாரோ இல்லை யோ இவராகக் கற்பித்துக் கூறியது இது என்பது மறக்க முடியாத ஒன்று. 'இன்று பெண்கள் ஆண்களைப் போல் தொழில் செய்கிறார்கள். நான் உத்தியோகம் செய்கிறேன். அதற்கே என் பொழுது முழுமையும் தேவைப்படுகிறது. இன்னும்