பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தவறு திருத்தப்பட்டது சமுதாயக் கடன்கள் நிறைய இருக்கின்றன. இந்தக் கூண்டுக்குள் அகப்பட்டு இதுதான் எல்லை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை'. "என்று பெண் தொழில் செய்ய நிர்பந்திக்கப் பட்டாளோ அன்றே இந்த இயற்கைக் கடமை அவளுக்கு இல்லை'. 'இந்தத் தேசம் புனர் வாழ்வு பெற வேண்டும். சீனா ஒரு குழந்தைக்கு மேல் அனுமதிப்பது இல்லை. ஷா பேரறிஞர் இது பாபம் என்று துணிந்து கூறியுள்ளார். என் கொள்கை உறுதியானது. இதுதான் எங்கள் கருத்து வேறு பாடு' என்று தெளிவுபடுத்தினாள். அவரால் இந்த வாதத்தை மறுக்க முடியவில்லை. தீர்ப்பு வழங்குவது எளிதில் இயலாது என அறிகின்றார். நீதிபதிகள் விசாரித்த உடனயே தீர்ப்புகள் தருவது இல்லை; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆற அமரச் சிந்தித்து இரு தரப்பு வாதங்களையும் எழுதியபின் தீர்ப்புக் கூற வேண்டியுள்ளது. மற்றும் அவரசப்பட்டால் பாதிக்கப் பட்டவனுக்கு ஆவேசம் கிளம்பும். நீதிமன்றம் அதன் நிலை குலைந்து நிற்கும். இரண்டு பேர் கலந்து பேசிக் கருத்துக் கூறவேண்டிய தீர்ப்பு அது என்று பட்டது. நாற்காலி பெஞ்சாக மாற வேண்டி ஏற்பட்டது: 'அவள் சொல்வது இது; அந்தப் பெண் சொல்வதில் நியாயம் இருக்கிறது. அவள் வீட்டில் அடங்கி இருக்கும் குடும்பப் பெண்ணல்ல; தொழில் செய்கிற அவளுக்குக் குழந்தை தேவையில்லை. இது என் கருத்து' என்றார். மூத்த நீதிபதி. 'நம் வாழ்க்கை அவர்களுக்கெல்லாம் பாடம். வாரிசு இல்லாத சொத்து. பெயர் சொல்லப் பிள்ளை இல்லாத