பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 41 குறை. நமக்கு ஆதரவாய் ஒரு பெண்; உறுதுணையாய் ஒரு மகன்; இரண்டும் இல்லை. விழிகள் இருக்கின்றன நமக்கு; பார்வை இல்லை என்றார் அம் மூதாட்டி. அவருக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. தம் வாழ் வில் ஒளி இல்லை என்பதை அவள் குறிப்பிட்டது அவருக்கு ஞானம் தந்தது. 'குழந்தைகளே வேண்டாம் என்பது மடமை; ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை தேவை. இதை வற்புறுத்து வதுதான் நல்லது'. 'பெரியவர்கள் இந்த உலகத்தைக் கெடுத்து விட் டார்கள். அவர்களால் இதை மாற்ற முடியாது; திருத்த முடியாது. புதிய சமுதாயம் பிறக்க வேண்டும். இளைய தலைமுறை தேவை; இந்த இருவரும் உலகத்தைச் சீர் செய்யக் குழந்தைகள் தேவை'என்ற முடிவுக்கு வந்தனர். "தைரியமாக ஒரு குழந்தையைத் தாங்கு. அதன் சுமையை எங்களுக்கு விட்டுவிடு. பெறுபவரே இறுதி வரை சுமக்க வேண்டும் என்ற நியதி தவறு; குழந்தை இந்தச் சமுதாயத்தின் சொத்து. அதை வளர்ப்பது எங்கள் கடமை. நாங்கள் வேலை வெட்டி இல்லாமல் இருக் கிறோம். எங்களுக்கு அது வாரிசு என்ற உணர்வு ததும்பத் தம் கருத்தினை வெளியிட்டனர். குழந்தைகள் அவற்றின் வளர்ச்சி, கல்வி இவை சமுதாயத்தில் பொறுப்பு என்ற புதிய கருத்து அவளை மாற்றியது. அதன்பின் கூட்டு எந்தச் சிக்கல் இல்லாமல் தொடர்ந்தது. ( ہمہ$