பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நூலிழை 6 நூலிழை 'மயிர் இழையில் தப்பினான்’ என்று சொல்வது எழுதுவது பத்திரிகை மரபு; இது அமங்கலமான சொல்; அதனால் நூல் இழை' என்ற ஒரு சொல் உள்ளது என்பது அறிய வேண்டிய சொல்வழக்கு. சாவுக்கும் வாழ்வுக்கும் சில சமயம் இவ்வளவே நெருக்கம் உள்ளது என்பதை அறிய முடிகிறது. 'அந்தப் பெண் மரணத்தைத் தழுவினாள்; மயிர் நீப்பீன் வாழாக் கவரிமான் ஆயினாள். காவல் நிலையம் சென்றாள்; வீடு வந்தாள்; சாவின் நிலையை அடைந்தாள். நடந்தது என்ன? அவள் மானம் தொடப்பட்டது; அவள் நிதானம் இழந்தாள்' இது ஒரு பத்திரிகைச் செய்தி. 'கல்லூரி முன் கலகலப்பாகச் சென்றாள்; சலசலப்பு நடந்தது; தொட்டார்கள்; அவள் துவண்டாள்; தரையில் விழுந்து அவள் புரண்டாள்; பின் எழவே இல்லை' பரபரப்பான செய்தி. சாவு இவ்வளவு எளிதாக வரும் என்று யார் எதிர்பார்த்தார்கள்? கணத்தில் இந்த மாற்றம், சாவு அவர்கள் மடியைத் தொட்டது; அது எப்படி வரும்? யாரை எப்படித் தொடும் என்று கூற முடியாது. அவன் ஒரு கவிஞன். கவிதை எழுதினான்; அவனால் சும்மா இருக்க முடியவில்லை; அதை அச்சிட்டு