பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 47 'பிள்ளையார் பிடிக்க அது குரங்காக மாறும்' என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. பாராட்டுப் பெற விரும்பினான். அது ஒரு தற்செயல் சந்திப்பாக மாறியது. கவிதைக்கு அவன் உயிர் பிழைக்க வழிகாட்ட முடிந்தது. அன்று அவன் செல்லவில்லை என்றால் அவன் நோய் அவனுக்குத் தெரியாமல் போயிருக்கும். 'இப்பொழுது எந்த நிலை” என்று கேட்கிறான் "ஆரம்ப நிலை. நீ உன் கவிதை நூலை வாழ்த்த வேண்டும். இல்லாவிட்டால் நீ இங்கு வந்திருக்க மாட் டாய். முற்றும் துறந்த முனிவனாகி இருப்பாய். முற்றி விட்டால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது; தப்பித்துக் கொண்டாய்” என ஆறுதல் கூறினார். 'வயிற்றை ஒரு பகுதி அது துளைத்து விட்டது; இன்னும் சிறிது பரவியிருந்தால் லிவர் மற்றும் உள் உறுப்புகளை எட்டியிருக்கும். யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்கிறார். 'எல்லாம் ஒரு நூல் இழைதான்' என்று விளக்கி னார். சாவுக்கும் வாழ்வுக்கும் ஒரு நூல் இழைதான் என்பதை அறிய முடிகிறது. இவனுக்கு முத்திரை குத்தப்பட்டு விட்டது: "இந் நோய் வந்தால் பிழைக்க முடியாது; இதற்கு மருத்துவம் இங்குச் சரியாக இல்லை. அமெரிக்கா சென்றால் பிழைக்க வாய்ப்பு உண்டு' என்று அறிவிக்கப்பட்டது. கவிஞர் கண்ணதாசன் அவன் நினைவுக்கு வருகிறார். அவர் செல்லும் போது கவிஞர்; திரும்பி வரும்போது கல்லறைப் பயணம்; சில நோய்கள் எங்குச் சென்றாலும் குணப்படுத்த முடிவது இல்லை.